கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அநாவசியமாக சுற்றித்திரிந்த 16பேர் வவுனியா பொலிசாரால் நேற்றையதினம் கைதுசெய்யபட்டுள்ளனர்.
ஊரடங்குவேளையில் வீதிகளில் சுற்றித்திரிந்தமைக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,15 பேர் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவளை கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் அவசியமின்றி வீதிகளில் திரிந்த 30 ற்கும் மேற்பட்டவர்கள் வவனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அத்தியவசிய சேவைகளை மேற்கொள்வோருக்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிபத்திரம் பொலிசாரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.