Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Sunday, 5 April 2020

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 16 பேர் கைது!


கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அநாவசியமாக சுற்றித்திரிந்த 16பேர் வவுனியா பொலிசாரால் நேற்றையதினம் கைதுசெய்யபட்டுள்ளனர்.
ஊரடங்குவேளையில் வீதிகளில் சுற்றித்திரிந்தமைக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,15 பேர் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவளை கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் அவசியமின்றி வீதிகளில் திரிந்த 30 ற்கும் மேற்பட்டவர்கள் வவனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அத்தியவசிய சேவைகளை மேற்கொள்வோருக்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிபத்திரம் பொலிசாரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்.


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகளவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், பரிதாபமாக பலியாகியும் வருகின்றனர். இந்த வைரஸ் நோயானது முதன் முதலாக சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகர் சந்தையில் விறால் மீன் விற்பனை செய்த பெண்மணிக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சீன நாட்டில் பயணத்தை துவங்கி, உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு பெருமளவு உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாலும், வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வெறுத்தாலும், வைரஸை மருந்தால் கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகள் தவித்து வருகிறது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் கரோனா வைரஸிற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 64,729 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,202,433 ஆக உயர்ந்துள்ள நிலையில், 246,638 பேர் பூரண நலன் பெற்று மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
இத்தாலி நாட்டில் 124,632 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 681 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,362 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் கடந்த இரண்டு நாட்களாகவே கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,053 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 7,560 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஐக்கிய நாட்டிலும் நேற்று 708 பேர் ஒரேநாளில் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்ந்துள்ளது.

Saturday, 4 April 2020

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!! அபிக்யா ஆனந்த்

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதிக நாட்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே அது தொடர்பாக ஆர்வமாக படித்ததுடன் வேதங்களையும் கற்று உணர்ந்தார்.
இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.இவருக்கு 2015ஆம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016ஆம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தன. இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து கான்சைன்ஸ் (Conscience) எனப்படும் யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.
இந்த யூ-டியூப் சேனலில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அபிக்யா குறிப்பிட்டுவருகிறார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளி
யிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே சரியாக கணித்துக் கூறிய இவர், குறித்த வைரஸ் தொற்று எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.
இவருடைய கணிப்புக்கள் தற்போது உலகளவில் பிரபலமடைந்திருப்பதுடன் இவருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதிக நாட்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே அது தொடர்பாக ஆர்வமாக படித்ததுடன் வேதங்களையும் கற்று உணர்ந்தார்.
இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.இவருக்கு 2015ஆம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016ஆம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தன. இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து கான்சைன்ஸ் (Conscience) எனப்படும் யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.
இந்த யூ-டியூப் சேனலில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அபிக்யா குறிப்பிட்டுவருகிறார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே சரியாக கணித்துக் கூறிய இவர், குறித்த வைரஸ் தொற்று எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.
இவருடைய கணிப்புக்கள் தற்போது உலகளவில் பிரபலமடைந்திருப்பதுடன் இவருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்து குணமாகிய நோயாளியை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள்

கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமாகிய நோயாளியை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கைதட்டி உற்சாகத்துடன் அனுப்பிவைத்தனர்.
#Kerala #COVID19https://www.facebook.com/1258464050865354/posts/3130154653696275/
">https://www.facebook.com/1258464050865354/posts/3130154653696275/?extid=MxLwZL5xAG9ZdjiN&d=null&vh=e

நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு? அரசாங்கத்தின் முடிவு என்ன

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அவர்,
நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும்.
அதேபோன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், இருந்து அடுத்த கட்டத்திற்கு கொரோனா வைரஸ் விரிவடையும் அபாயத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Thursday, 11 May 2017

சுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான்

போதிய வருவாய் இல்லாததன் காரணமாக பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் பெற்றோருடனே வசித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 20-க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பெற்றோருடனே வசித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகளை மேற்கொள்வதில்லை எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஆய்வுக்காக சுவிஸ் இளைஞர்களில் 1067 பேரிடம் நேர்முகம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 20-ல் இருந்து 29 வயது இளைஞர்களில் 27 சதவிகிதம் பேர் பெற்றோருடனே வாழ்ந்து வருகின்றனர்.
மட்டுமின்றி இதில் பெரும்பாலானவர்கள் உணவு அல்லது உறவிடத்திற்கான பண உதவிகள் எதுவும் குறித்த வயது இளைஞர்கள் அளிப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
19 சதவிகித இளைஞர்கள் மாதம் 100- 300 பிராங்கு வரை பெற்றோரிடம் அளித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவிகித இளைஞர்கள் தங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரங்களால் மட்டுமே இன்னமும் பெற்றோருடன் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வாடகை, கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை முக்கிய காரணங்களாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பயின்று வருவதால் தங்களிடம் போதிய பணப்புழக்கம் இல்லை எனவும், பெற்றோருடன் வசிப்பதால் வாடகை உள்ளிட்ட செலவினங்களை மிச்சப்படுத்தலாம் எனவும் இளைஞர்கள் கருதுகின்றனர்.
மட்டுமின்றி பெற்றோருடன் வசிப்பதால் உணவு மற்றும் துவைப்பது உள்ளிட்டவைகளில் தங்களின் பங்கு மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 6 சதவிகித இளைஞர்கள் தாங்கள் பெற்றோருடனே வசிப்பதன் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டது சுவாரசியமானது. தற்போதுள்ள உயர் தர வாழ்க்கையை விட்டுவிட முடியாது என்பதாலையே பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆய்வறிக்கை இவ்வாறு இருக்க, இளைஞர்கள் தங்களுடன் வசிப்பதை 67 சதவிகித பெற்றோர் ஆதரிப்பதாகவே தெரிய வந்துள்ளது. தங்களது பிள்ளைகள் உரிய காலம் வரும்போது மட்டும் பிரிந்து சென்றால் போதும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மோடியின் விஜயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் திருப்பு முனையாக அமையுமா?

கௌதம புத்தரினால் பரப்பப்பட்ட புத்த சமயத்தின் வெசாக்தினத்தையும் இந்தியாவின் பிரதமர் மோடியின் விஜயமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைய நல்லாட்சி அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஸ்கரா அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி அரசாங்கம் காணமல் போனோர் விடயத்தில் நல்லதோர் முடிவெடுக்க வேண்டிய இறுதி நேரம் இதுவாகும்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தபின் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இராணுவத்துடன் கையளித்து இன்று வரையும் இருப்புத் தெரியாது 80வது நாட்களுக்கு மேலாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நியாயமான கோரிக்கைக்கு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இதுதான்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதிக் கட்டத்தில் தமது போராட்டத்தை வேறு திசையை நோக்கி நகர்த்த வேண்டிய தேவையை ஆணித்தனமாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் உலக அரங்கில் அவப்பெயரையும் உலக நாடுகளின் ஐ.நாடுகள் சபையின் அவப்பெயருக்கும் உட்படாமல் ஜனாதிபதியோ பிரதம மந்திரியோ பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டிய இறுதிக் கட்டமாகும்.
காணாமல் போனோர் பிரச்சினை என்பது இலங்கை அரசிற்கு கடினமானது என்பது தெரிந்த உண்மைதான்.
என்றாலும் கூட பிரச்சினைகள் ஒருவரையறையை மீறி உடன் கையாளப்பட வேண்டும். இது இன்றியமையாத ஒன்றாகும்.
பலர் காணாமல் போனதும் இன்னும் பலர் மறைமுக முகாங்களிலும் இன்னும் சிலர் வேறுபல இடங்களிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பது பலமுறை தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும்.
இது உரிய முறையில் கையாளப்படவேண்டும். சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு காணிப்பத்திரம் கிடைக்க ஆவணம் செய்யப்படவேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

இந்திய பிரதமருக்கு இரவு விருந்துபசாரம் அளித்த ஜனாதிபதி! எதிர்கட்சித் தலைவர் பங்கேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபார நிகழ்வில் இந்திய பிரதமர் கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்தார்.
பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் மோடி கலந்து கொண்டார்.
இவ் விருந்துபசார நிகழ்வில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி இந்திய தூதுவர் தரண்ஜித்சிங் சந்து, இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர், ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.