Saturday, 4 April 2020








Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com – UK










<!-- DNS Prefetch








































































"Google"
"Facebook"
"Youtube"
"Gmail"











"RIPBOOK"
துயர் பகிர்வுகள்
மேலும் மரண அறிவித்தல்களுக்கு



Coronavirus Cases

Total cases
1,133,767

Deaths
60,396

Recovered
236,000
Country Confirmed cases Cured Death
Sri Lanka 182 25 5
UK 38,168 135 3,605
Italy 119,827 19,758 14,681
Germany 91,159 24,575 1,275
France 82,165 14,008 6,507
USA 277,607 12,283 7,406
மேலதிக செய்திகளுக்கு

தமிழ்வின் செய்திகள்





மேலும் தமிழ்வின் செய்திகளுக்கு

மனிதன் செய்திகள்

மேலும் மனிதன் செய்திகளுக்கு

சிறப்பு செய்திகள்





மேலும் சிறப்புச் செய்திகளுக்கு










-->

நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு? அரசாங்கத்தின் முடிவு என்ன

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அவர்,
நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும்.
அதேபோன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், இருந்து அடுத்த கட்டத்திற்கு கொரோனா வைரஸ் விரிவடையும் அபாயத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

லொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கவும் களம் இறங்கிவிட்டார்.
ஆரியுடன் ஒரு படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லொஸ்லியா புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், லொஸ்லியா பெயரை கெடுக்கவே இப்படி ஒரு வேலைப்பார்த்ததாக தெரிகிறது.
இதற்கு லொஸ்லியாவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் செம்ம பதிலடி கொடுத்துள்ளார். இதோ உங்களுக்காக அந்த பதிவு...https://www.instagram.com/p/B-W9IpCp98d/?utm_source=ig_web_copy_linklosliyamariya96

Verified

In this world with full of lies, we all have some sparkles which stays in our lives but at one point we do realize that we've only left alone with our inner souls. The world is full of fear and a lot of negativity and a lot of judgment. I just think people need to start shifting into joy and happiness.ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் ...

Thursday, 11 May 2017

சுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான்

போதிய வருவாய் இல்லாததன் காரணமாக பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் பெற்றோருடனே வசித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 20-க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பெற்றோருடனே வசித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகளை மேற்கொள்வதில்லை எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஆய்வுக்காக சுவிஸ் இளைஞர்களில் 1067 பேரிடம் நேர்முகம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 20-ல் இருந்து 29 வயது இளைஞர்களில் 27 சதவிகிதம் பேர் பெற்றோருடனே வாழ்ந்து வருகின்றனர்.
மட்டுமின்றி இதில் பெரும்பாலானவர்கள் உணவு அல்லது உறவிடத்திற்கான பண உதவிகள் எதுவும் குறித்த வயது இளைஞர்கள் அளிப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
19 சதவிகித இளைஞர்கள் மாதம் 100- 300 பிராங்கு வரை பெற்றோரிடம் அளித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவிகித இளைஞர்கள் தங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரங்களால் மட்டுமே இன்னமும் பெற்றோருடன் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வாடகை, கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை முக்கிய காரணங்களாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பயின்று வருவதால் தங்களிடம் போதிய பணப்புழக்கம் இல்லை எனவும், பெற்றோருடன் வசிப்பதால் வாடகை உள்ளிட்ட செலவினங்களை மிச்சப்படுத்தலாம் எனவும் இளைஞர்கள் கருதுகின்றனர்.
மட்டுமின்றி பெற்றோருடன் வசிப்பதால் உணவு மற்றும் துவைப்பது உள்ளிட்டவைகளில் தங்களின் பங்கு மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 6 சதவிகித இளைஞர்கள் தாங்கள் பெற்றோருடனே வசிப்பதன் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டது சுவாரசியமானது. தற்போதுள்ள உயர் தர வாழ்க்கையை விட்டுவிட முடியாது என்பதாலையே பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆய்வறிக்கை இவ்வாறு இருக்க, இளைஞர்கள் தங்களுடன் வசிப்பதை 67 சதவிகித பெற்றோர் ஆதரிப்பதாகவே தெரிய வந்துள்ளது. தங்களது பிள்ளைகள் உரிய காலம் வரும்போது மட்டும் பிரிந்து சென்றால் போதும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மோடியின் விஜயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் திருப்பு முனையாக அமையுமா?

கௌதம புத்தரினால் பரப்பப்பட்ட புத்த சமயத்தின் வெசாக்தினத்தையும் இந்தியாவின் பிரதமர் மோடியின் விஜயமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைய நல்லாட்சி அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஸ்கரா அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி அரசாங்கம் காணமல் போனோர் விடயத்தில் நல்லதோர் முடிவெடுக்க வேண்டிய இறுதி நேரம் இதுவாகும்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்தபின் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இராணுவத்துடன் கையளித்து இன்று வரையும் இருப்புத் தெரியாது 80வது நாட்களுக்கு மேலாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நியாயமான கோரிக்கைக்கு முடிவு எடுக்கவேண்டிய நேரம் இதுதான்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதிக் கட்டத்தில் தமது போராட்டத்தை வேறு திசையை நோக்கி நகர்த்த வேண்டிய தேவையை ஆணித்தனமாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் உலக அரங்கில் அவப்பெயரையும் உலக நாடுகளின் ஐ.நாடுகள் சபையின் அவப்பெயருக்கும் உட்படாமல் ஜனாதிபதியோ பிரதம மந்திரியோ பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டிய இறுதிக் கட்டமாகும்.
காணாமல் போனோர் பிரச்சினை என்பது இலங்கை அரசிற்கு கடினமானது என்பது தெரிந்த உண்மைதான்.
என்றாலும் கூட பிரச்சினைகள் ஒருவரையறையை மீறி உடன் கையாளப்பட வேண்டும். இது இன்றியமையாத ஒன்றாகும்.
பலர் காணாமல் போனதும் இன்னும் பலர் மறைமுக முகாங்களிலும் இன்னும் சிலர் வேறுபல இடங்களிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பது பலமுறை தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும்.
இது உரிய முறையில் கையாளப்படவேண்டும். சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு காணிப்பத்திரம் கிடைக்க ஆவணம் செய்யப்படவேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

இந்திய பிரதமருக்கு இரவு விருந்துபசாரம் அளித்த ஜனாதிபதி! எதிர்கட்சித் தலைவர் பங்கேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபார நிகழ்வில் இந்திய பிரதமர் கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்தார்.
பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் மோடி கலந்து கொண்டார்.
இவ் விருந்துபசார நிகழ்வில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி இந்திய தூதுவர் தரண்ஜித்சிங் சந்து, இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர், ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

Thursday, 24 March 2016

Kathakali

Starring : Vishal, Catherine Tresa, Regina Cassandra 

Music : Hiphop Tamizha 

Director : Pandiraj 

Lyrics : HipHop Thamizha

Song titleDownloads
AzhageSinger(s) : HipHop Thamizha
Kathakali ThemeSinger(s) : HipHop Thamizha
Erangi VandhuSinger(s) : Hip Hop Thamizha, Anthony Dasan
Kathakali WhistleSinger(s) : HipHop Thamizha