இந்திய பிரதமருக்கு இரவு விருந்துபசாரம் அளித்த ஜனாதிபதி! எதிர்கட்சித் தலைவர் பங்கேற்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபார நிகழ்வில் இந்திய பிரதமர் கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்தார்.
பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் மோடி கலந்து கொண்டார்.
இவ் விருந்துபசார நிகழ்வில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி இந்திய தூதுவர் தரண்ஜித்சிங் சந்து, இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர், ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.