Sunday, 5 April 2020

பிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்.


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகளவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், பரிதாபமாக பலியாகியும் வருகின்றனர். இந்த வைரஸ் நோயானது முதன் முதலாக சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகர் சந்தையில் விறால் மீன் விற்பனை செய்த பெண்மணிக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சீன நாட்டில் பயணத்தை துவங்கி, உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு பெருமளவு உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாலும், வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வெறுத்தாலும், வைரஸை மருந்தால் கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகள் தவித்து வருகிறது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் கரோனா வைரஸிற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 64,729 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,202,433 ஆக உயர்ந்துள்ள நிலையில், 246,638 பேர் பூரண நலன் பெற்று மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
இத்தாலி நாட்டில் 124,632 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 681 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,362 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் கடந்த இரண்டு நாட்களாகவே கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,053 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 7,560 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஐக்கிய நாட்டிலும் நேற்று 708 பேர் ஒரேநாளில் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்ந்துள்ளது.